×

4 மீனவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி, திருமாவளவன் பங்கேற்பு

சென்னை: 4 மீனவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மீனவர்கள் சென்ற படகை இலங்கை கடற்படையினர் படகு மீது மோதி மூழ்கடித்தனர். இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்களும் பலியானார்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட மீனவர்கள் உடலில் காயங்கள் இருந்ததால் அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இலங்கை கடற்படையின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 4 மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து இலங்கை அரசுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நிஜாமுதீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Vaiko ,protest ,killing ,fishermen ,Thirumavalavan ,Bharathi , Vaiko-led protest against the killing of 4 fishermen: RS Bharathi, Thirumavalavan
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...