×

அமைச்சர்களுக்கு மீண்டும் துறைகள் மாற்றம்

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை கடந்த 13ம்தேதி மூன்றாவது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டு அமைச்சரவையில் 7 பேர் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதைத்தொடர்ந்து துறைகள் ஒதுக்கப்பட்ட நிலையில் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. அதன் காரணமாக சில துறைகள் மாற்றப்பட்டன. இந்நிலையில் அதிலும் அதிருப்தி ஏற்பட்டதால் மூன்றாவது முறையாக மாற்றம் செய்து கவர்னர் விஆர் வாலாவுக்கு முதல்வர் எடியூரப்பா பரிந்துரை செய்தார். முதல்வர் எடியூரப்பாவின் பரிந்தரைக்கு கவர்னர் விஆர் வாலா ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி மாநில அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் முழு விபரம் வருமாறு:

    அமைச்சர் பெயர்    துறைகள்
1    முதல்வர் எடியூரப்பா    நிதி, பெங்களூரு வளர்ச்சி, மின்சாரம், ஊழியர் மற்றும் நிர்வாகம், அமைச்சரவை விவகாரம் மற்றும்  ஒதுக்கீடு செய்யப்படாத பிற துறைகள்
2    துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள்    பொதுப்பணி
3    துணை முதல்வர் அஸ்வத்நாராயண்    உயர் கல்வி, தகவல் மற்றும் உயிரி தொழில் நுட்பம், அறிவியல் தொழில் நுட்பம்.
4    துணை முதல்வர் லட்சுமண் சவதி    போக்குவரத்து
5    பசவராஜ் பொம்மை    உள்துறை (புலனாய்வு தவிர), சட்டம் மற்றும்
பேரவை விவகாரம்
6    கேஎஸ் ஈஸ்வரப்பா    ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்
7    ஆர்.அசோக்    வருவாய்
8    ரமேஷ் ஜாரகிஹோளி    நீர்ப்பாசனம்
9    ஜெகதீஷ் ஷெட்டர்    தொழில் வளர்ச்சி
10    கோபாலய்யா    கலால் துறை  
11    ராமுலு    சமூக நலம்
12    ஆனந்த்சிங்    ஹஜ் மற்றும் வக்பு வாரியம், நகர அடிப்படை வளர்ச்சி துறை
13    சுரேஷ்குமார்    கல்வி
14    டாக்டர் சுதாகர்    சுகாதாரம் மற்றும் மருத்துவ  கல்வி
15    பைரதி பசவராஜ்    நகர வளர்ச்சி
16    ஆர்.சங்கர்    பட்டு வளர்ச்சி மற்றும் தோட்டக்கலை
17    கேசி நாராயணகவுடா    இளைஞர் நலம், திட்டம், புள்ளியல் மற்றும் விளையாட்டு
18    ஜேசி மாதுசாமி    சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா
19    சிசி பாட்டீல்    சிறு தொழிற்சாலை, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு  
20    எஸ்.டி. சோமசேகர்    கூட்டுறவு
21    பிரபு சவுஹான்    கால்நடை பராமரிப்பு, சிறுபான்மை மக்கள்  நலம்
22    சசிகலா ஜொள்ளே    பெண்கள் மற்றும் குழந்தைகள்
23    சிவராம்ஹெப்பார்    தொழிலாளர் நலம்
24    பிசி பாட்டீல்    வேளாண்மை
25    சீமந்தபாட்டீல்    ஜவுளி
26    கோட்டா சீனிவாசபூஜாரி    இந்து சமய அறநிலையம்
27    எம்டிபி நாகராஜ்    நகர நிர்வாகம் மற்றும் கரும்பு வளர்ச்சி
28    வி.சோமண்ணா    வீட்டுவசதி
29    உமேஷ்கத்தி    உணவு மற்றும் பொது வினியோகம்
30    எஸ்.அங்காரா    மீன்வளர்ச்சி, துறைமுக மேம்பாடு
31    அரவிந்த் லிம்பாவளி    வனம் மற்றும் கன்னட கலாசாரம்
32    முருகேஷ் நிராணி    சுரங்கம் மற்றும் கனிம வளம்
33    சி.பி.யோகேஸ்வர்    சிறிய நீர்ப்பாசனம்
மாநில அமைச்சரவையில் இன்னும் ஒரேயொரு இடம் மட்டும் காலியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : ministers , The Karnataka cabinet was expanded for the third time on the 13th and seven new members were added to the cabinet
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...