×

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கம்.!!!

சென்னை: வரும் 26.01.2021, செவ்வாய்க்கிழமை( நாளை) குடியரசு தினத்தன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை கோட்டம் மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26.01.2021, செவ்வாய்க்கிழமை அன்று, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு/திருமால் பூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் (402 சேவைகள்) கால அட்டவணைப்படியே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai , Chennai suburban train service tomorrow as per Sunday schedule. !!!
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...