×

பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுமா?.. ரிசர்வ் வங்கி விளக்கம்

டெல்லி: பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. போலி நோட்டுகளின் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அவ்வப்போது, ​​ரிசர்வ் வங்கி (Reserve Bank) பழைய தொடர் கரன்சி நோட்டுகளை நிறுத்தி புதிய நோட்டுகளை கொண்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அறிவிப்புக்குப் பிறகு நிறுத்தப்படும் பழைய நோட்டுகள் அனைத்தும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். டெபாசிட் செய்யப்பட்ட மொத்த நோட்டுகளின் மதிப்பிலான பணத்தை வங்கி உங்கள் கணக்கில் மீண்டும் பரிமாற்றம் செய்யும், அல்லது புதிய நோட்டுகளாக வங்கி மாற்றிக்கொடுக்கிறது.

இந்நிலையில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளை திருப்ப பெற இருப்பதாக ஒரு தகவலானது தொடச்சியாக வெளியாகி வந்தது. இந்த வதந்தியை முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தற்போது ரிசர்வ் வங்கியானது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பழைய வரிசை ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை. 100, 10, 5 ரூபாயின் பழைய வரிசை நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக வெளியான தகவல் தவறானது. மேலும் தற்போது இதுபோன்ற சூழல் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.


Tags : RBI , Will old 100, 10, 5 rupee notes be withdrawn? .. RBI explanation
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு