×

அரசியலில் ஒரு குடும்பத்தில் 1 உறுப்பினர்: நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர முடியுமா?...பிரதமர் மோடிக்கு மம்தா மருமகன் சவால்.!!!

கொல்கத்தா: அரசியலில் ஒரு குடும்பத்தில் 1 உறுப்பினர் மட்டுமே இருக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர முடியுமா? என பிரதமர் மோடி மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட் 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதி, திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) நாடாளுமன்ற உறுப்பினரும், முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி நேற்று நடைபெற்ற கட்சியில் பேரணியில் உரையாற்றியபோது, ​​அரசியலில் ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே இருப்பதை நீங்கள் (பிஜேபி) உறுதிசெய்தால், அடுத்த கணத்திலிருந்து அரசியலில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மம்தா பானர்ஜி மட்டுமே இருப்பார். நான் அதை உறுதியளிக்கிறேன் என்றார்.

மேலும், இந்த சவாலை ஏற்க முடியுமா? அரசியலில் ஒரு குடும்பத்தில் 1 உறுப்பினரை மட்டுமே அனுமதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வருமாறு நான் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார். அத்தகைய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால், நான் 24 மணி நேரத்தில் அரசியலை விட்டு வெளியேறுவேன். மம்தா மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் பகிரங்கமாக தூக்கில் தொங்குவேன் என்றும் அபிஷேக் பானர்ஜி கூறினார்.

Tags : Parliament ,Mamata ,nephew , 1 member in a family in politics: Can a bill be brought in Parliament? ... Mamata's nephew challenges Prime Minister Modi !!!
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...