×

திருவாரூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

திருவாரூர் : திருவாரூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலம் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவாரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயி களிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு லாரிகளில் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 42 வேகன்களில் ஏற்றப்பட்ட 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : Thiruvarur ,Krishnagiri , Thiruvarur: 2,000 tonnes of paddy was sent by freight train from Thiruvarur to Krishnagiri for threshing.
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்