×

உறைபனியில் பாதிக்காத வகையில் பூங்காக்களில் அலங்கார செடிகளை பாதுகாக்கும் பணிகள் தீவிரம்

ஊட்டி : உறைபனியால் பாதிக்காத வண்ணம் தேயிலை பூங்கா, மரவியல் பூங்காவில் அலங்கார செடிகளை பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் இருந்து உறைபனிப்பொழிவு இருந்து வருகிறது. தாவரவியல் பூங்கா மைதானம், குதிரை பந்தய மைதானம், தலைக்குந்தா, சூட்டிங்மட்டம், கோரக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் உறைப்பனி கொட்டி வரகிறது.உறைப்பனி காரணமாக தேயிலை செடிகள் காய்ந்து கருகி பசுமை இழந்து வருகின்றன.

இதனிடையே ஊட்டியில் உள்ள பூங்காக்களில் உள்ள மலர் செடிகள், அலங்கார செடிகள் பனியால் கருகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள இந்த மலர் செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி தாகை செடி கொண்டு பாதுகாக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் பாதிக்காத வண்ணம் காலை, மாலை இரு வேளைகள் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. ஊட்டி மரவியல் பூங்கா, தொட்டபெட்டா அருகேயுள்ள தேயிலை பூங்கா உள்ளிட்டவற்றில் உள்ள அலங்கார செடிகளை தாகை செடிகள் கொண்டு பாதுகாப்பு ஏற்படுத்தும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோடை சீசனுக்கு தயார் செய்யும் வகையில் இப்பூங்காவில் மலர் நாற்று நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : parks ,plants , Ooty: Protection of ornamental plants at the Tea Garden and the Arboretum Garden from frost damage.
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் கைத்தறி பூங்கா