×

வாக்களிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை வாக்காளர்களிடம் ஏற்படுத்த வேண்டும் : தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி அட்வைஸ்!

டெல்லி : வாக்களிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை வாக்காளர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 11வது தேசிய வாக்காளர் தினத்தை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று கொண்டாடுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம், வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களின் பதிவை ஊக்குவிப்பதுதான். நாட்டின் வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள், வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் தகலறிந்த பங்கேற்பை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தில், புதிய வாக்காளர்களுக்கு போட்டோ அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அதில்,தேசிய வாக்காளர் தினம் என்பது நமது ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் தேர்தல்களை சீராக நடத்துவதை உறுதிப்படுத்தவும் தேர்தல் ஆணையத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டும் ஒரு சந்தர்ப்பமாகும். வாக்காளர் பதிவை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான ஒரு நாள் இது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Modi ,voters , Prime Minister Modi, Advice
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...