×

சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவம் ஓட ஓட விரட்டியடிப்பு : இருதரப்பு மோதலில் 20 சீன வீரர்கள், 4 இந்திய வீரர்கள் காயம்!!

சிக்கிம் :சிக்கிமில் எல்லையில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே கடந்த மே மாதம் தொடங்கிய ராணுவ மோதல், தற்போது வரை நீடித்து வருகிறது. அவ்வப்போது எல்லையில் ஊடுருவ முயலும் சீனாவின் அத்துமீறலை சமாளிக்க 50 முக்கிய இடங்களில் வீரர்களை குவித்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கிறது இந்தியா. அதே போல சீனாவும், தனது பங்கிற்கு வீரர்களை குவித்திருக்கிறது.இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது இப்பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண்பதற்கு, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 9 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுரு முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. 3 தினங்களுக்கு முன்பு வடக்கு சிக்கிம் மாநிலத்தில் உள்ள Naku La என்ற சீன எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லை வழியாக சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதனைக் கவனித்த இந்திய வீரர்கள், சீன வீரர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் பகுதிக்கு திரும்பிச் செல்லும்படி கூறினர். ஆனால் சீன வீரர்கள் ஊடுருவல் முயற்சியை கைவிடாமல் முன்னேற முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.இதில், 20 சீன வீரர்களும் 4 இந்திய வீரர்களும் காயமடைந்திருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சீன வீரர்கள் பின் வாங்கியதாகவும இந்திய ராணுவம் தரப்பில் தகவல் கூறப்படுகிறது.


Tags : soldiers ,troops ,Chinese ,border ,Sikkim ,clash ,Indian , Sikkim, border, Chinese army
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்