முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீதான பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு: கேரள அரசு அதிரடி

திருவனந்தபுரம்: கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது, சோலார் பேனல் மோசடி வழக்கு தொடர்பாக சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். அவர்,  அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் காங்கிரஸ் எம்பி வேணுகோபால், தற்போதைய எம்பிக்களான அடூர் பிரகாஷ், ஹைபி ஈடன், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் அனில்குமார், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ அப்துல்லா குட்டி ஆகிய 6 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு உம்மன்சாண்டி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.  இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ.யிடம் ஒப்படைக்க கேரள அரசு தீர்மானித்து உள்ளது. இது தொடர்பாக விரைவில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப கேரள அரசு முடிவு செய்துள்ளது. இவர்களில் அப்துல்லா குட்டி முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 2 முறை எம்பியாக இருந்தார். பின்னர் காங்கிரசுக்கு தாவிய இவர் எம்எல்ஏ ஆனார். கடந்த வருடம் பாஜவில் சேர்ந்த அவர், தற்போது இவர் பாஜ தேசிய துணை தலைவராக உள்ளார்.

Related Stories:

>