திருமணம் ஆகாத ஏக்கம் இளம்பெண் தற்கொலை

புழல்: புழல் காவாங்கரை திருநீலகண்ட நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சதீஷ்குமார்(25), ஜெயலட்சுமி(23) என்ற மகன், மகள் உள்ளனர். பிஎஸ்சி முடித்த ஜெயலட்சுமிக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். ஆனால், எந்த வரனும் அமையவில்லை. இதனால், மனமுடைந்த ஜெயலட்சுமி நேற்று முன்தினம் காலை கழிவறையில் துப்பாட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில்  புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>