வன்னியர் இட ஒதுக்கீடு பாமக நிர்வாக குழு கூட்டம் 31ம் தேதிக்கு தள்ளிவைப்பு: ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாமக நிர்வாககுழு அவசரக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு இணையவழியில் நடைபெறும் என்று பாமக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காதபட்சத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பாமக மூத்த தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாமக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வரும் இன்று (25ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு இணைய வழியில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இவ்வாறு ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>