×

பஞ்சாபில் விவசாயிகள் முற்றுகையால் ‘குட் லக் ஜெர்ரி’ பட ஷூட்டிங் நிறுத்தம்: நடிகை ஜான்வி உள்ளிட்டோர் ஓட்டலுக்கு ஓட்டம்

பாட்டியாலா: பஞ்சாபில் விவசாயிகளின் முற்றுகையால் ‘குட் லக் ஜெர்ரி’ சினிமா ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதனால், நடிகை ஜான்வி உள்ளிட்டோர் ஓட்டலுக்கு திரும்பிச் சென்றனர். டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா விவசாயிகள் ெதாடர் போராட்டங்களை  நடத்தி வரும் நிலையில், பஞ்சாபில் சினிமா ஷூட்டிங் சில இடங்களில்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘குட் லக் ஜெர்ரி’ என்ற பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு பஞ்சாபின் பாட்டியாலாவில் நேற்று நடந்தது. இதையறிந்த கிராம விவசாயிகள் சிலர், படப்பிடிப்பு நடத்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் சினிமா படப்பிடிப்பை நிறுத்த வலியுறுத்தினர். அந்த இடத்தில் மறைந்த நடிகை தேவியின் மகள் ஜான்வி கபூரும் இருந்தார்.

படப்படிப்பு குழுவினர் விவசாயிகளை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் விவசாயிகள் படப்பிடிப்பை உடனே நிறுத்துமாறு வலியுறுத்தினர். மேலும், ‘புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறும் வரை, பஞ்சாபில் எந்தவொரு சினிமா ஷூட்டிங்கையும் நடத்த அனுமதிக்க மாட்டோம்’ என்றனர். இறுதியாக நீண்ட போராட்டத்திற்கு பின் வேறு வழியின்றி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, படக்குழுவினர் பரதாரியில் உள்ள நிம்ரானா ஓட்டலுக்குத் திரும்பினர். சிறிது நேரம் கழித்து, விவசாயிகளின் குழுவும் அங்கு வந்து கோஷங்களை எழுப்பியது. போலீசார் விவசாயிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மேலும், பஞ்சாபில் எந்தவொரு படப்பிடிப்பையும் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று போலீசார் உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் அமைதியடைந்தனர். முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 13ம் ேததி பஞ்சாபின் பதானாவில் நடந்து கொண்டிருந்தது, அங்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் படப்படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர், தீபக் டோப்ரியல், மிதா வஷிஷ்ட், நீரஜ்  சூத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் சல்மான் கானும்  அடுத்த வாரம் பாட்டியாலாவுக்கு வர திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது பஞ்சாபில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : film shooting ,siege ,Good Luck Jerry ,Actress Janvi ,hotel ,Punjab , 'Good Luck Jerry' film shooting halted due to farmers' siege in Punjab: Actress Janvi enters hotel
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...