ஒரு நாள் போட்டியிலும் பன்ட்டிற்கு இடம்: ஆஸி. மாஜி வீரர் கருத்து

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட்டில் ஆட்டம் இழக்காமல் 80 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு ரிஷப் பன்ட் உறுதுணையாக இருந்தார். இதனால் அவர் தவர்க்க முடியாத வீரராக மாறி உள்ளார். இந்நிலையில் ரிஷப் பன்ட்டிற்கு ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆஸி. முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் வலியுறுத்தி உள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்காக நன்றாக ஆடுவதை விட வேறு சிறந்த விஷயம் இருக்க முடியாது.

தற்போது ரிஷப் பன்ட்டிற்கு தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இங்கிலாந்து எதிரான டி.20, ஒருநாள் தொடர் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு பன்டை அணியில் சேர்க்கலாம். அதன் மூலம், மற்ற ஆல்ரவுண்டர்களை அணியில் தக்க வைக்கலாம், என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>