×

கூடுவாஞ்சேரி அருகே நெடுஞ்சாலை ஓரம் உள்ள 100 ஆண்டுகள் பழமையான புளிய மரங்கள் வெட்டி அகற்றம்: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு..!!

சென்னை: சென்னையில் கூடுவாஞ்சேரி அருகே நெடுஞ்சாலை ஓரம் உள்ள 100 ஆண்டுகள் பழமையான புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. தைலாவரம் பகுதி சாலை விரிவாக்கப் பணிக்காக  பழமையான புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு வரை 17.6 கிலோமீட்டர் இரு வழி சாலை செல்கிறது. இந்த சாலையை ஒட்டியுள்ள நந்திவரம், மூலக்கழனி, பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு, கன்னிவாக்கம், பாண்டூர், கல்வாய், நெல்லிக்குப்பம் உள்பட பல்வேறு கிராமங்களில் பல பள்ளிக்கூடங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும் அதிக அளவில் இருப்பதால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் கூடுவாஞ்சேரி– கொட்டமேடு சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் இந்த சாலை எப்போதும் நெரிசல் மிகுந்த சாலையாக காணப்படுகிறது. இதன் காரணமாக தினமும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதையடுத்து மத்திய அரசின் சாலை நிதி திட்டத்தின் கீழ் கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு வரை செல்லும் 17.6 கிலோமீட்டர் இரு வழி சாலையை ரூ.76 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி தொடங்கி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

கூடுவாஞ்சேரியில் இருந்து காயரம்பேடு வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருப்பதால் அவற்றை அகற்றும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில்,
100 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை வெட்டிய நெடுஞ்சாலைத் துறையின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags : highway ,Guduvancheri ,activists , kooduvancheri, road work, ancient trees,, removal, social activists
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு