×

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20, 21ம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு..!

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20ம் தேதி, 21ம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை செயலாளர், டி.ஜி,பி., தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தினார். அதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களை எப்போது நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்தலின் போது மத்திய பாதுகாப்பு படையினரின் தேவை குறித்து மத்திய அரசுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

ஆனால் இம்முறை தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. எனவே பொதுத்தேர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் இருக்கிறது. இந்த சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உடன் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைத்தல், அதற்கான இடங்களை தேர்வு செய்தல், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை மும்முரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்தும் ஆலோசனையின் அடிப்படையில் பிப்ரவரி கடைசி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் மே 5ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : election ,Tamil Nadu Assembly ,meeting ,Announcement ,Election Commission , Tamil Nadu, Assembly Election, Election Commission
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...