சிறப்பு ஆதார் திருத்த முகாம்

பொன்னேரி: அரியன்வாயல் கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆதார் திருத்தங்களுக்காக பொன்னேரி ஆதார் மையத்தை நாட வேண்டிய நிலையில் இருந்தனர். மேலும் புதிய ஆதார் அட்டை எடுப்பதிலும் பல சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்நிலையில், காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை ஏற்பாட்டில் சிறப்பு ஆதார் திருத்த முகாம் நேற்று நடைபெற்றது. இதில் புதிய ஆதார் அட்டை எடுத்தல், கைபேசி எண் இணைப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வயது திருத்தம் ஆகிய பணிகள் நடைபெற்றன. இம்முகாமினை மாவட்ட தாபல் நிலைய துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் உமாசங்கரி, மீஞ்சூர் குறுவட்ட ஆய்வாளர் கந்தன், கிராம நிர்வாக அதிகாரி சாந்தி, மீஞ்சூர் பகுதி வழக்கறிஞர் சங்க துணை தலைவர் நித்யகுமார், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல உதவி செயற்பொறியாளர் செய்யது அலி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு  துவக்கி வைத்தனர். இம்முகாமின் மூலம் அரியன்வாயல், கல்பாக்கம், அத்திப்பட்டு, மீஞ்சூர், ஆரணி, காட்டூர், ஊரணம்பேடு கிராமங்களை சேர்ந்த 180 நபர்கள் பயன்பெற்றனர். அறக்கட்டளை நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

Related Stories:

>