×

மக்களை எதிர்கொள்ள அச்சமா? தமிழக அரசுக்கு கமல் கேள்வி

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: கிராம சபை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. கூட்டம் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருப்பது, மக்களை எதிர்கொள்ள அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.  நீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும். பூரண சுதந்திரமே தேவை என்று, வீரத்தை உயர்த்தி போர்க்களம் கண்டவர் சுபாஷ் சந்திர போஸ். 125வது பிறந்தநாள் காணும் அந்த நேத்தாவுக்கு ரயில் விடுவது, பராக்கிரம தினமாக அனுஷ்டிப்பதோடு, அவரது

கொள்கையை நெஞ்சில் நிறைப்பதே சிறந்த அஞ்சலி. காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கி போகும் யானையை கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தை சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிக்கிறது. காலம் தலைகுனிகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : government ,Kamal ,Tamil Nadu , Afraid to face people? Kamal questions the Tamil Nadu government
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...