×

தண்ணீரில் கொசு வளர்வதை தடுக்க மாத்திரை வடிவ மருந்து: சென்னையில் விரைவில் சோதனை

சென்னை: நல்ல தண்ணீரில் கொசு வளர்வதை தடுக்க தனியார் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை வடிவ மருந்தை  ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் பூச்சியியல் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் சோதனை செய்ய உள்ளது. கொசுக்கள் மூலம் பரவும் தொற்று நோய்களால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக வீடுகள் மற்றும் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் கொசு வளர்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தண்ணீரில் கொசு வளர்வதை தடுக்க தனியார் நிறுவனம் ஒன்று மாத்திரை வடிவ மருந்து ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த மருந்தை ஐசிஎம்ஆர் நிறுவனம் சென்னையில் சோதனை செய்ய முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கொசுக்களை ஒழிப்புது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தண்ணீரில் கொசு வளர்வதை தடுக்க தனியார் நிறுவனம் ஒன்று மாத்திரை வடிவ மருந்து ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த மருந்தை ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பூச்சியியல் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சோதனை செய்ய உள்ளது. மாத்திரை வடிவில் உள்ள மருந்தை நல்ல தண்ணீரில்

போட்டால் போதும் அந்த தண்ணீரில் உள்ள கொசு முட்டைகள் எல்லாம் அழிந்து விடும். தண்ணீரையும் நாம் பயன்படுத்தலாம். எனவே இந்த மருந்து சென்னையில் விரைவில் சோதனை செய்யப்படவுள்ளது. இந்த சோதனையில்  இந்த மாத்திரையை எந்த இடத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதும் ஆய்வு செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai ,Test , Mosquito, tablet-shaped medicine, test
× RELATED சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பறக்கும் படை சோதனை