தென்மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் கூறியதாவது:தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

24ம் தேதி(இன்று) முதல் 27ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்த பட்சம் வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக கோவை விமான நிலையத்தில் 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

Related Stories:

>