காசிமேடு கடற்கரையில் மேம்பாட்டு பணிக்கு ரூ.120 கோடியில் திட்ட வரைவு தயாரிப்பு: மத்திய அமைச்சர் நேரில் ஆய்வு

சென்னை: காசிமேடு கடற்கரை பகுதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.120 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதை நேற்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் ஆய்வு செய்தார். சென்னை மீன்பிடி துறைமுகம் காசிமேடு கடற்கரை பகுதியில் நாளுக்கு நாள் ஏற்படும் வளர்ச்சியின் காரணமாக படகுகள் நிறுத்துமிடங்கள், மீன்கள் சில்லறை விற்பனை பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. துறைமுகத்திற்கு உள்ளே வரக்கூடிய அணுகு சாலைகள் மிகவும் பழுதடைந்து இருப்பதாலும், புதிய சாலைகள் அமைப்பது, துறைமுக உட்பகுதியில் மீன்களை பதப்படுத்த குளிரூட்டப்படும் நிலையங்கள், பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.120 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் தென் பகுதியில் நவீன வசதிகளுடன் 120 சில்லறை விற்பனை கூடங்கள் அமைக்கவும், தானியங்கி தட்ப வெப்ப நிலையங்கள், துறைமுகத்தின் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல் மற்றும் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய சூரிய மின் விளக்குகள் பொருத்துதல் போன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளவும் திட்ட அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதை மத்திய மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கிரிராஜ்சிங் காசிமேடு சென்று சென்னை மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்தார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>