சட்டசபை தேர்தல் கூட்டணி திமுக, காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

சென்னை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி மாநிலத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் அதை தெளிவுபடுத்தியுள்ளார். சட்டசபை தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து பேசி கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள். புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தமட்டிலும் கூட்டணி பற்றி முடிவு செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை. அதுபற்றி இரு கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்யும். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.

Related Stories:

>