×

காகிதமே கிடையாது முதன் முறையாக டிஜிட்டல் பட்ஜெட்: அல்வாவும் கிண்டினார் நிர்மலா

புதுடெல்லி: கொரோனா அச்சம் காரணமாக 2021ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, காகிதமில்லா பட்ஜெட் என்ற திட்டத்துக்காக மொபைல் செயலியை நேற்று அறிமுகப்படுத்தியது மத்திய நிதி அமைச்சகம். பிப்ரவரி முதல் தேதியன்று 2021-2022 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். ஆண்டுதோறும் பட்ஜெட் தயாரிக்கும் பணியை அல்வா கிண்டி, நிதியமைச்சர் தொடங்கி வைப்பது வழக்கம். இந்தாண்டு முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தாண்டு பட்ஜெட் முழுக்க முழுக்க டிஜிட்டலில் இடம் பெற உள்ளது. இதற்கான சிறப்பு செயலியை நிர்மலா சீதாராமன் நேற்று அறிமுகப்படுத்தினார்.

* ‘union budget’ மொபைல் செயலி என்ற அந்த செயலி, இந்தி, ஆங்கிலம்  மொழிகளில் இடம் பெறுகிறது.
* ஆன்ட்ராய்டு, ஆப்பிள் என 2 விதமான மொபைல் போன்களிலும் இதை பதிவிறக்கம் செய்யலாம்.
* பிரின்ட் எடுப்பது, புதிய தகவல்களை தேடுவது, ஜூம் செய்து பார்ப்பது உள்ளிட்ட வசதிகளுடன் இந்த செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
* நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை முடிந்த பிறகு மட்டுமே செயலி செயல்பட தொடங்கும். அதில் இருந்து தகவல்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.


Tags : Kindinar Nirmala ,Alva , No paper for the first time Digital budget: Alva and Kindinar Nirmala
× RELATED தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கியுள்ளனர்: பிரதமர் மோடி பேச்சு