அபுதாபி டி10 லீக் அடித்து நொறுக்குவதற்கு காத்திருக்க முடியவில்லை... கிறிஸ் கேல் உற்சாகம்அபுதாபி டி10 லீக் அடித்து நொறுக்குவதற்கு காத்திருக்க முடியவில்லை... கிறிஸ் கேல் உற்சாகம்

அபுதாபி: அபுதாபியில் ஜன.28ம் தேதி முதல் பிப்.6ம் தேதி வரை 10 ஓவர்கள் அடிப்படையிலான டி10 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. அதில் விளையாட உள்ள அணிகளில் கிறிஸ் கேல், ஷாகித் அப்ரிடி, கைரன் போலார்டு, டுவைன் பிராவோ, சோயிப் மாலிக் உட்பட உலகின் முன்னணி வீரர்கள் களம் காண உள்ளனர். இந்த 4வது சீசனில் அபுதாபி அணிக்காக களம் இறங்க உள்ள கிறிஸ் கேல், ‘போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதிக எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன். அந்தப் போட்டியில் மிகப்பெரிய ஷாட்களை அடித்து நொறுக்க காத்திருக்க முடியவில்லை. எப்போது தொடங்கும் என்ற நிலையில் இருக்கிறேன். இந்த சீசன் கட்டாயம் தரமான பொழுதுபோக்காக அமையும்’ என்று கூறியுள்ளார்.

டெக்கான் கிளேடியட்டர் அணி கேப்டனான கைரன் போலார்டு, ‘டி10 போட்டி ஏற்படுத்தும் சிலிர்ப்பும், உற்சாகமும் வரம்பற்றது. நான் விளையாடிய கிரிக்கெட்களில் இருந்து டி10 வேறுபட்டதல்ல. இந்தப் போட்டி எனக்கு பொருத்தமானதாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் வெளிநாட்டில் நடைபெறும் உள்ளூர் தொடர்களில் விளையாட தடை உள்ளது. அதனால் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் யாரும் ஐபிஎல் தவிர, இது போன்ற தொடரில் பங்கேற்க முடியாது. ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க முடியும்.

Related Stories:

>