×

கோவையில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி பேக்கரி கடையில் தேநீர் அருந்திய ராகுல் காந்தி!

கோவை: தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டார். செல்லும் வழியில் திடீரென கடைக்குள் சென்று கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தேநீர் அருந்தினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒருபகுதியாக இன்று திருப்பூர் மாவட்டத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதல் நிகழ்வாக அவிநாசி பேருந்து நிலையம் வந்த அவர் , வரவேற்பை பெற்றுக்கொண்டு கூடியிருந்த மக்களிடையே பேசினார். அப்போது , டெல்லியில் உள்ள அரசு ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்கின்ற வழிகளில் செல்கிறது என்றும் , அங்கிருக்கிற பிரதமர்  தமிழக அரசை  கட்டுப்படுத்தியது போல  தமிழக மக்களை கட்டுப்படுத்தலாம் என நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் , தமிழக மக்களை விலை கொடுத்து வாங்கலாம் என நினைப்பதாகவும் ,  தமிழக மக்கள் நினைத்ததை தான் செய்வார்கள்.  

யாரும் வாங்க முடியாது என்றுசெலுத்தினார்மிவசாயத்தையும் ,சிறு குறு தொழில்களையும் 5 அல்லது 6 முதலாளிகளிடம் ஒப்படைத்துவிடலாம் என நினைக்கிறார் என்று கூறியவர், என் குடும்பத்திற்கும், தமிழ்  மக்களுக்கும் இடையே அரசியலை கடந்து ஒரு உணர்வூப்பூர்வமாகவுன் அன்பின் அடையாளமாகவும் இருக்கிறது.உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான ஓர் அரசை கொண்டுவர முயல்கிறோம் என்று கூறி விடைபெற்றார். பிறகு அங்கிருந்து கிளம்பியவர் , அனுப்பர்பாளையம் வருவதற்குள் திடீரென காரை நிறுத்தி அருகில் இருந்த கடைக்குள் சென்று கட்சி நிர்வாகிகளுடன் தேநீர் அருந்தினார்.

அடுத்த இடமாக அனுப்பர்பாளையம் பகுதிக்கு வந்து மக்களிடையே பேசும் போது , இந்தியாவின் நிலைமையை அனவரும் அறிவோம். பொருளாதாரம் சீர்குலைவை சந்தித்து வருகிறது என்றதுடன் , பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி , கொரோனா வை கையாண்ட விதத்தால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மதம் , கலாச்சாரம் நமக்கு கற்பித்ததை அவர்கள் உணரவில்லை. நம் கலாச்சாரம் அடுத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது.

இது தான் தமிழகத்தின் கலாசரம், அடையாளம் என்று கூறியவர் , மேலும் என்னுடைய மன்கிபாத்தை சொல்ல நான் இங்கு வரவில்லை என்றும்  உங்களுடைய மன்கிபாத் (குறைகளை ) கேக்கவே இங்கு வந்துள்ளேன் என்று கூறி அங்கு இருந்து கிளம்பினார். ரயில் நிலையம் பகுதியில் உள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்திற்கு வந்த ராகுல் காந்தி குமரனனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார.


Tags : Rahul Gandhi ,bakery ,Coimbatore , Rahul Gandhi breaks tea at bakery in Coimbatore
× RELATED சொல்லிட்டாங்க…