நடராஜனை தமிழில் வாழ்த்திய வார்னர்

ஆஸ்திரேலிய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணியிடம் இழந்து சொந்த மண்ணில் தோல்வியடைந்த விரக்தியில் உள்ளது.  இதனிடையே ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுவும் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளது தான் மிக சிறப்பு. அவரது தமிழ் கேட்பதற்கு வேறுமாதிரி இருந்தாலும் அவரது ஸ்போர்ட்மேன்ஷிப்பை பலர் பாராட்டி வருகின்றனர்.

அந்த வீடியோவில் ``வாழ்த்துக்கள் நட்டு.. வாழ்த்துக்கள்...’’ என்று தமிழில் பேசிய டேவிட் வார்னர் நீங்கள் ஒரு லெஜண்ட் என்று வெகுவாக பாராட்டி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

Related Stories:

>