ஆஷஸ் தொடர் இனி முக்கியமில்லை; இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது தான் சாதனை: இங்கிலாந்து மாஜி வீரர் ஸ்வான் பேட்டி

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர் பற்றி இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலிய அணி இனி சிறந்த அணி இல்லை. முழு பலத்துடன் விளையாடிய ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தி உள்ளது. இனி ஆஸ்திரேலிய அணியுடனான ஆஷஸ் தொடர் முக்கியம் என இங்கிலாந்து அணி நினைக்க வேண்டியதில்லை.

ஆஸ்திரேலியா இனியும் சிறந்த அணி இல்லை. இதனால் இங்கிலாந்து அணி இனியும் ஆஷஸ் தொடருக்காக மெனக்கெடுவதை விட்டுவிட்டு இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்த திட்டமிட வேண்டும். அதன்தான் பெரிய சாதனை. இந்தியாவில் இந்தியாவை வீழ்த்துவது மிக உயர்ந்த விஷயம் என்று நான் நினைக்கிறேன். 2012 ல் நாங்கள் அவர்களை வென்றதிலிருந்து அவர்கள் இந்தியாவில் கிட்டத்தட்ட தோற்கடிக்க முடியாதவர்கள். இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்காவிட்டால் தொடரை வெல்ல முடியாது. சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறமையை பெற்றால் இந்தியாவை வீழ்த்தலாம், என்றார்.

Related Stories:

>