பேரவை தேர்தல் கூட்டத்தில் பங்கேற்க அசாம் வந்தார் அமித் ஷா: பாஜகவினர் உற்சாக வரவேற்ப்பு

கவுகாத்தி: அசாமில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இன்று அதிகாலை கவுகாத்தி வந்தடைந்தார். அவர், நாளை (ஜன. 24) கவுகாத்தியில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். முன்னதாக, போடோலாந்து பிராந்திய கவுன்சில் கூட்டத்திலும் பங்கேற்கிறார். பாஜக துணைத் தலைவரும் அசாமின் கட்சிப் பொறுப்பாளருமான பைஜயந்த் ஜெய் பாண்டா தற்போது அசாமில் முகாமிட்டு அமித் ஷாவின் பேரணிக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உள்துறை அமைச்சர் ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக அசாமிற்கு வந்துள்ளார். போடோலாந்து பழங்குடியினர் கவுன்சில் பகுதியில் நடக்கும் அரசின் நலத்திட்டங்களை துவக்க வைத்து அங்கு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார். நல்பரியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் உரையாற்றுவார்’ என்றார்.

Related Stories:

>