×

தமிழகத்தில் மோடி மீதான கோபம் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

ஈரோடு: தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் அளித்த பேட்டி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கின்றதோ அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் தங்களை முன்னிலை படுத்துவதும், ஆட்சி அமைப்போம் என்று கூறுவதும் வாடிக்கைதான். தமிழகத்தில் பா.ம.க, ச.ம.க உள்ளிட்ட கட்சிகள் கூட நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என்று கூறிக்கொண்டுதான் உள்ளனர்.

இந்த தேர்தலை பொறுத்த வரை நாங்கள் தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். தமிழகத்தில் மோடி மீதான கோபம் மக்களிடம் கடுமையாக உள்ளது. அந்த கோபம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலித்தது. தற்போது மிக அதிகமான அதிருப்தியில் மக்கள் உள்ளனர். இது சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். விவசாயிகள் மாதக்கணக்கில் கடும் குளிரில் டெல்லியில் போராடி வருகின்றனர். ஜி.எஸ்.டி காரணமாக வணிகர்கள், உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Modi ,Tamil Nadu ,Ilangovan ,EVKS Interview , Anger over Modi echoes in assembly polls in Tamil Nadu: EVKS Interview with Ilangovan
× RELATED மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்;...