பிரையன்ட் பூங்காவில் பூத்த ஆர்னமென்டல் செர்ரி பூக்கள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல்: கொடைக்கான‌லில் வ‌ருட‌த்திற்கு ஒரு முறை பூக்கும் ஆர்ன‌மென்ட‌ல் செர்ரி ம‌ல‌ர்க‌ள் பூத்துள்ளதால் சுற்றுலா ப‌ய‌ணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  கொடைக்கான‌ல் பிரைய‌ண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை ம‌ர‌த்தில் பூக்கும் ஆர்ன‌மென்ட‌ல் செர்ரி ம‌ல‌ர்க‌ள் பூக்க‌த் துவ‌ங்கிய‌து. ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் பூக்க‌ துவ‌ங்கும் இந்த‌ ம‌ல‌ர்க‌ள் பிப்ர‌வ‌ரி, மார்ச் மாதங்க‌ள் வ‌ரை நீடிக்கும். இள‌ம் சிவ‌ப்பு நிற‌த்தில் பூக்கும் இந்த‌ ம‌ல‌ர்க‌ள் ம‌ர‌த்தில் பூக்கும் நேர‌த்தில் அழ‌காக‌ காட்சி அளிக்கும்.

மேலும் பிரைய‌ண்ட் பூங்காவிற்கு வ‌ரும் ப‌ய‌ணிக‌ள் இந்த‌ ம‌ல‌ர்க‌ளை கண்டு ர‌சித்து செல்வ‌துடன் புகைப்ப‌ட‌ம் எடுத்தும் ம‌கிழ்வ‌ார்கள். வ‌ருட‌த்திற்கு ஒரு முறை பூக்கும் இந்த‌ ஆர்ன‌மென்ட‌ல் செர்ரி ம‌ல‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ வார‌ம் பூக்க‌த் துவ‌ங்கிய‌து. இந்த செர்ரி மலர்கள் பூக்கும் மரம் முழுவதும் பூக்கள் நிறைந்து காணப்பட்டு வருகிறது. இதனால் கொடைக்கான‌லுக்கு வ‌ரும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் மகிழ்ச்சி அடைந்துள்ள‌ன‌ர்.

Related Stories:

>