×

கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் ஆளில்லாத விமானம் மூலம் அகழ்வாராய்ச்சி பணி துவக்கம்

ஜெயங்கொண்டம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடம் தேர்வுக்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் தொடங்கி கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் 2020- 21ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் போன்று 7 மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்து இருந்தது.அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு இடம் தேர்வு செய்யும் பணிகள் நேற்று துவங்கியது.

முதற்கட்டமாக ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, மாளிகைமேடு உள்ளிட்ட 18 கிமீ சுற்றளவில் சென்று தொழில்நுட்ப கருவிகள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னர் இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவிக்கையில், மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கிய 12 இடங்களில் ஏழு இடங்களில் தற்போது அகழாய்வு பணி. கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற மாவட்டங்கள் அகழாய்வுப் பணிகள் தொடங்கிவிட்டது.

தற்போது கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெறுவதற்கான இடங்களை ஆய்வு செய்வதற்காக இன்று முதற்கட்ட ஆய்வு நடைபெற்று உள்ளது. இதில் கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேடு சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திருவாரூர் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களை கொண்டு கள ஆய்வு சேகரிக்கப்பட்டு, பின்னர் அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து அதன் பின்னர் விரிவான ஆய்வு எடுக்கப்பட உள்ளது என்றார்.



Tags : Gangaikonda Cholapuram , Unmanned aerial vehicle excavation begins in Gangaikonda Cholapuram area
× RELATED காமதகனமூர்த்தி