×

ஆம்னி பஸ்களுக்கு தனி பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியில் கடந்த 1981ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் பெருகி வரும் சாலை போக்குவரத்து தனியார், அரசு பேருந்துகளின் இயக்கம் அதிகரித்தது. இதானல் இந்த பகுதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் அதிகரித்துவிட்டது. பேருந்து நிலையத்துக்குள் இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளே நுழையும் பேருந்துகள் தாமதமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது.புதுக்கோட்டையிலிருந்து 200க்கும் மேற்பட்ட புறநகர் பேருந்துகள் சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு இயங்கி வருகின்றன. திருச்சி விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்திய பிறகு சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, ராமநாதபுரம் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர்கள் திருச்சி விமானநிலையத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் ராமேஸ்வரம், ராமநாதபுரம், தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, பரமக்குடி, இளையான்குடி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 40க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சென்னைக்கும், சில பேருந்துகள் பெங்களூர், கோவைக்கும் புதுக்கோட்டை வழியாக சென்று வருகின்றன.

மேலும் புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் தினமும் 10 ஆம்னி பேருந்துகள் சென்னைக்கு சென்று வருகின்றன. இதன் மூலம் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், இவ்வளவு எண்ணிக்கையில் நீண்ட தூரம் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதி இல்லாத காரணத்தால் புதுகை நகரில் இரவு 9 மணியிலிருந்து 11 மணி வரை இப்பேருந்துகளில் செல்லும் பயணிகள் அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையத்தில் மேல்புறத்திலுள்ள சாலை, அரசு மகளிர் கல்லூரி செல்லும் சாலை, உழவர் சந்தை சாலை போன்ற வெவ்வேறு இடங்களுக்கு சென்று சிரமப்படும் நிலை தொடர்கிறது. இது ஒரு புறம் இருக்க பேருந்துகளுக்கு தன் உறவினர்களை வாகனங்களில் அழைத்து வருபவர்கள் வாகனங்களை நிறுத்த இடம்மில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு தனியாக பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : bus station ,Omni , Separate bus station for Omni buses should be set up: Public demand
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்