சென்ட்ரல் சுரங்கப்பாதை பணிகளை 15 நாட்களில் முடிக்க கோரிய வழக்கு!: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சென்ட்ரல் சுரங்கப்பாதை பணிகளை 15 நாட்களில் முடிக்க கோரிய வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஜய்பிரான்சிஸ் வழக்கில் தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்காலிக பாலத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொல்லப்பட்டிருந்தது. ஜப்பான் போன்ற நாடுகளில் மக்களுக்கு இடையூறு இன்றி ஒரேவாரத்தில் நடைபாதை அமைப்பதாக சுட்டிக்காட்டி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related Stories:

>