×

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது

ஓசூர்: ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.12 கோடி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று பட்டப்பகலில் 25 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி போலீசார் கொள்ளையடித்த 6 பேரை ஐதராபாத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் கொள்ளைபோன நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



Tags :
× RELATED EVM வாக்குகளோடு 100% ஒப்புகை சீட்டுகளையும்...