×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் விபத்துகள் குறைந்தன

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர்,  ஆண்டுதோறும் விபத்துக்கள் மற்றும் அதில் பலி எண்ணிக்கை கணக்கிடுவது வழக்கம். அதன்படி கடந்த 2019ம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பவ்வேறு பகுதிகளில் 1094 விபத்துகள்  நடந்துள்ளன. இதில் 300 உயிரிழப்புகளும், 1162 பேர் காயமடைந்தனர். கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெகுவாக போக்குவரத்து குறைந்தது. இதனால் கடந்த ஆண்டில் 400 விபத்துகளில் 167 பேர்  உயிரிழந்தனர். 707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள் அடங்கிய சென்னை - பெங்களூர் தேசியநெடுஞ்சாலையில் 234 விபத்துகளில் 77 பேர் இறந்தனர். 474 பேர் காயமடைந்தனர் என மாவட்ட காவல்துறை  தெரிவித்துள்ளது எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றி முறையாக வாகனங்களை இயக்க வேண்டும். மேலும், விபத்துகளை தடுக்க, அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்களில், வேக கட்டுப்பாட்டுக் கருவி  பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், கார்களில் செல்வோர், கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக செல்வதால், விபத்து ஏற்படுவதுடன், மற்றவர்களையும் விபத்தில் சிக்க வைக்கின்றனர் என காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.

Tags : Corona ,curvature accidents ,Kanchipuram district , Corona curvature accidents are less in Kanchipuram district
× RELATED மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன்...