×

காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காமாட்சி அம்மன் கோயில் கணிக்கையாக உண்டியலில் 45.39 லட்சம் 284 கிராம் தங்கம்:
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உண்டியலில் 45.39 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று 2 நிரந்தர உண்டியல் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கைகள்  எண்ணும் பணி நடந்தது. காஞ்சிபுரம் உதவி ஆணையர் ஜெயா தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில்  ஊழியர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். இதில் ₹45 லட்சத்து 39 ஆயிரத்து 560 ரொக்கம், 284 கிராம் தங்கம்,  600 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்களின் காணிக்தகையாக இருந்தன. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில்  காமாட்சி அம்மன் தேவஸ்தான காரியம் சல்லா. விஸ்வநாத சாஸ்திரிகள் சங்கர மட காரியம் செல்லப்பா உள்ளிட்டோர் இருந்தனர்.

மொபட்டில் வைத்த பணம் அபேஸ்: மர்மநபர்களுக்கு  வலை:
குன்றத்தூர்: மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் சத்யா (40). அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் சத்யா, குன்றத்தூரில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு தனது  கணக்கில் இருந்து, மகளிர் குழுவுக்கு கொடுக்க வேண்டிய 10 ஆயிரத்தை  எடுத்தார். அதனை ஒரு பையில் போட்டு, மொபட்டின் சீட் அடியில் வைத்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். குன்றத்தூர், பஜார் சாலையில் உள்ள பிரியாணி கடையின்  வெளியே நிறுத்திய அவர், கடைக்குள் பிரியாணி வாங்க சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது, மொபட் சீட்டு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் இருந்த 10 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள்  கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தீயணைப்பு துறை சார்பில் ‘தீ மொபைல் செயலி’ விழிப்புணர்வு பிரசாரம்:
மாமல்லபுரம்:  மாமல்லபுரதத்தில் தீயணைப்புத் துறை சார்பில், ‘தீ மொபைல் செயலி’ குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீயணைப்பு துறை சார்பில், பொதுமக்கள் எளிதில் சேவையை பெற ‘தீ’ என்ற மொபைல் செயலி  புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் படிப்படியாக பொதுமக்களுக்கு அந்தந்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் தீ செயலி குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் மூலம்  நேற்று, பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த தீ செயலியை பதிவிறக்கம் செய்வது மூலம் ஒருநபரோ அல்லது கால்நடைகளோ கிணற்றில் விழுந்தால் எப்படி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிப்பது என விளக்கமளித்தனர்.

இதுகுறித்து மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவசங்கரன் கூறுகையில், ‘பொதுமக்கள் கைபேசி மூலம் ப்ளே ஸ்டோரில், தீ செயலியை டவுன்லோடு செய்யலாம். திடீரென தீ விபத்து ஏற்பட்டால், தீ செயலிக்கு சென்று உதவி என்ற  இடத்தில் கிளிக் செய்தால், நீங்கள் எங்கு உள்ளீர்களோ அந்த ஏரியா தீயணைப்பு துறை நிலையத்துக்கு அலாரம் அடிக்கும். அப்போது, உங்கள்  போன் நெம்பர், டவர் லொகேஷன் உள்பட அனைத்தையும் எங்களால் தெரிந்து கொள்ள முடியும்  என்றார்.

Tags : Kanchipuram District News , As predicted by Kamatchi Amman Temple
× RELATED காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்