×

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: நல உதவிகளும் வழங்கினார்

சென்னை: கொளத்தூர் தொகுதியை பார்வையிட்டு, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு நல உதவிகளையும் வழங்கினார்.திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியை நேற்று பார்வையிட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து, நல உதவிகளை வழங்கினார்.  வார்டு 65 வது வார்டு, சீனிவாசா நகர் 3வது தெருவில் திறந்தவெளி நிலத்தில் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கும் பணிக்கு, மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் வார்டு 65 சீனிவாசா நகர் 6வது குறுக்குத் தெரு - கன்னியம்மன் கோயில் குளத்தினை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். வார்டு 64- சன்னதி தெருவில் ‘‘மக்களைத் தேடி மருத்துவம்” எனும் திட்டத்தின் கீழ், ஏழை - எளிய  பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் மருத்துவ சேவை வழங்கும் நிகழ்ச்சியினை பார்வையிட்டார்.

வார்டு 68- திரு.வி.க நகர் குடியிருப்பில் இரண்டு குழந்தைகள் நல்வாழ்வு மையம் மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். வார்டு 68 - பல்லவன் சாலை, ஆரம்ப சுகாதார மையத்தில் காசநோய் சிகிச்சைக்காக கூடுதல் அறைகள் அமைக்கும்  பணிக்கு அடிக்கல் நாட்டினார்.  வார்டு 68 - பல்லவன் சாலையில் நியாயவிலைக் கடை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். வார்டு 67 - கனகர் தெரு, சுந்தரராஜர் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள குளத்தை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். வார்டு 66-  ஜவஹர் நகர் 2வது வட்ட சாலை, குழந்தைகள் விளையாட்டுத் திடலை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். வார்டு 66ல் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குதலை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி  - 21, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி - 23, மடிக்கணினி- 8, மருத்துவ உதவி-16, திருமண உதவி-8, தையல் இயந்திரம்- 12, மீன்பாடி வண்டி-5,

நான்கு சக்கர தள்ளு வண்டி-5,  இரு சக்கர மோட்டார் பொருத்திய வாகனம்-1, காது கேட்கும் இயந்திரம்-1, இஸ்திரிப் பெட்டி-1, மாவு அரவை இயந்திரம் - 1, செயற்கைக் கால் - 1, வீடு தீ விபத்து ஏற்பட்ட குடும்பத்திற்கு உதவி-3 என, மொத்தம் 106 பேருக்கு மு.க.ஸ்டாலின்,  நல உதவிகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுசெயலாளர் பொன்முடி, எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன், பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர்  உடனிருந்தனர்.

‘இலங்கை அரசு  தலா 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 4 தமிழக மீனவர்களின் குடும்பத்திற்கு இலங்கை அரசு தலா ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென பிரதமர்  மோடி நிர்ப்பந்தித்து, கடுமையான கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


Tags : MK Stalin ,constituency ,Kolathur , MK Stalin initiated various development projects in Kolathur constituency: He also provided welfare assistance
× RELATED கொளத்தூர் மற்றும் திருவிக நகர்...