தலைமை நீதிபதியிடம் வக்கீல் சங்கம் கோரிக்கை சென்னை ஐகோர்ட்டை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில நீதிமன்றங்கள் மட்டும் நேரடி  விசாரணையை தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி முதல் அனைத்து கீழமை நீதிமன்றங்களும் நேரடி விசாரணையை தொடங்கியுள்ளன.  ஆனால், உயர் நீதிமன்றத்தில் இதுவரை முழுமையாக நேரடி விசாரணை தொடங்கவில்லை. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன.  தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியிடம் நேற்று ஒரு  மனு கொடுத்தார். அதில், ஆன்லைன் மூலம் 20 சதவீத  வழக்கறிஞர்களே நீதிமன்றங்களில் ஆஜராகிறார்கள். உயர் நீதிமன்றம் முழுமையாக திறக்கப்படாததால்  கடுமையான சிரமத்திற்கு வழக்கறிஞர்கள் ஆளாகியுள்ளனர். உயர் நீதிமன்றத்தை  நம்பியுள்ள வக்கீல்கள், வக்கீல் குமாஸ்தாக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் உரிய கொரோனா பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றத்தை  முழுமையாக திறந்து நேரடி வழக்கு விசாரணையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories:

>