×

சென்னை காரம்பாக்கத்தில் பதுங்கி இருந்த சர்வதேச போதைபொருள் கடத்தல் தலைவன் கூட்டாளியுடன் கைது

சென்னை: இலங்கைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே நடுக்கடலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டு படகுகள் மூலம் 100 கிலோ ஹெராயின் மற்றும் 18 கிலோ மெத்தபெட்டமைனை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார்  பறிமுதல் செய்தனர். 6 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது இலங்கையை சேர்ந்த சர்வதேச  குற்றவாளியான நவாஸ் மற்றும் முகமது ஹப்னாஸ் என தெரியவந்தது.  இவர்கள் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், மாலத்தீவு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பல கோடி மதிப்புள்ள போதை பொருட்களை நடுக்கடலிலேயே  கப்பலில் மாற்றி வியாபாரம் செய்தது தெரியவந்தது. முக்கிய குற்றவாளிநவாஸ் மற்றும் முகமது ஹப்னாஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சென்னை அருகே உள்ள காரம்பாக்கத்தில் இருவரும் பதுங்கி இருப்பது போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. அதைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அதிரடியாக துப்பாக்கி முனையில் இலங்கையை  சேர்ந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவர் நவாஸ் மற்றும் அவனது கூட்டாளி முகமது ஹப்னாஸை சுற்றி வளைத்து கைது செய்தனர். இலங்கையை சேர்ந்த நவாஸ் கடந்த 10 ஆண்டுகளாக முறையான பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்தது தெரியவந்தது. அதேபோல், முகமது ஹப்னாஸ் 3 ஆண்டுகளாக எந்தவித ஆணங்களும் இல்லாமல்  தலைமறைவாக சென்னையில் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கை அரசு நவாஸை தேடப்படும் குற்றவாளியாக அளிவித்து இன்டர்போல் போலீசார் உதவியுடன் தேடி வந்ததும் தெரியவந்துள்ளது.




Tags : drug trafficking leader , International drug trafficking leader arrested along with his accomplice
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...