சிறுவனுக்கு செயற்கை ரத்தநாளம் பொருத்தி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சாதனை

சென்னை: சிறுவனுக்கு செயற்கை ரத்தநாளம் பொருத்தி சாதனை படைத்த சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவனை சாதனை படைத்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த சங்கர் (17) என்ற சிறுவன் கடந்த 2019ம் ஆண்டு கடும் வயிற்று வலி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில், சிறுவன் வயிற்றில் இருந்த  பெருந்தமணியில் உயிருக்கு ஆபத்தான வீக்கம் இருப்பது தெரிந்தது.இதையடுத்து, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு சவாலான தமணி வீக்கம் சீரமைக்கும் முறை வெற்றிகரமாக செய்தனர். நல்ல முறையில் அப்போது சிறுவன் வீடு திரும்பினான்.  பிறகு ரத்தநாள அலர்ஜி  பாதிப்பு உள்ள அவனுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கடும் வலி மற்றும் தமணியில் வீக்கம் உண்டானது. இதனால், மீண்டும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அந்த சிறுவனுக்கு அதிநவீன சிகிச்சை  முறை தேவைப்பட்டது. தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் உதவியாலும், டாக்டர்களின் கடின உழைப்பாலும் பெருந்தமணி செயற்கை ரத்தநாளம் பொருத்தும் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

இந்த சாதனையை செய்து முடிக்க காரணமாக இருந்த ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர், நிலைய அலுவலர் மற்றும் ரத்தநாள துறை தலைவர் மற்றும் மருத்துவர்களுக்கு நேரில் சென்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டினார்.

Related Stories:

>