பைடன் எங்கள் அதிபர் அல்ல: டிவிட்டரில் இந்தியர்கள் கலகலப்பு

புதுடெல்லி: அமெரிக்க அதிபராக கடந்த 20ம் தேதி பதவியேற்ற ஜோ பைடன், ‘இது அமெரிக்காவின் புதிய நாள்’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் கமென்ட் அளித்திருந்த ஒருவர், ‘ஜோ பைடன் என்னுடைய அதிபர்  அல்ல’ என்று கூறியிருந்தார். இதனால், ‘நீங்கள் டிரம்ப் ஆதரவாளரா?’ என்று அமெரிக்கர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதில்தான் டிவிட்டரை நேற்று கலகலப்பாக்கியது. ‘இல்லை… நான் இந்தியர்’ என்று கூறினார். போபாலைச் சேர்ந்த பிரயாக் என்ற அவரின் பதிலால், முதலில் அதிர்ச்சியான நெட்டிசன்கள், பின்பு அதன் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டதால் சீரியஸ் மேட்டர் காமெடியாக வைரலானது. ‘ஜோ பைடன் என்னுடைய அதிபர் இல்லை’ என்ற  ஹேஷ்டேக்கையும் டிரெண்டிங் செய்தனர். ‘ஜோ பைடன் மட்டுமல்ல, டிரம்பும் என்னுடைய அதிபர் கிடையாது. ஏனெனில், நான் இந்தியர்’ என்றும், இந்திய ஜனாதிபதியின் படத்தைப் பகிர்ந்து ‘இவர்தான் எங்கள் அதிபர்’ என்றும் பல்வேறு மீம்ஸ்களும் வெளியாகி டிவிட்டரை  கலகலப்பாக்கியது.

Related Stories:

>