பெண் தாதா எழிலரசி இணைந்த விவகாரம் பாஜக தலைவரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் டி.ஆர்.  பட்டினத்தைச் சேர்ந்தவர் எழிலரசி (35). பெண் தாதாவான இவர் மீது அவரது கணவர்  ராமு, முன்னாள் ராமுவின் முதல் மனைவி வினோதா, முன்னாள் சபாநாயகர் விஎம்சி   சிவக்குமார் ஆகியோரின் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு  வழக்குகளில் தொடர்புடைய எழிலரசி கடந்த 2018ம் ஆண்டு குண்டாசில் கைது  செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி, காரைக்கால் நேதாஜி   நகரில் வசித்து வந்தார். கடந்தாண்டு 2020 டிசம்பர் 31ம்தேதி  டிஆர் பட்டினம் காவல் நிலையத்தில் புதிதாக மற்ெறாரு புகார் அளிக்கப்பட்டது.  அதாவது ராமுவின் மகன் ராஜேஷ் ராம் மற்றும் ராமுவின் மாமனார் செல்வராஜ்  இருவரையும்  மிரட்டி மதுபான கடையை எழுதி வாங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த எழிலரசியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.  போலீசார் கண்ணில் மண்ணை தூவி விட்டு மரக்காணம் அடுத்த மஞ்சங்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக தலைவர்  சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் எழிலரசி  கட்சியில் இணைந்தார். காவல்துறையால் தேடப்பட்டு வரும் நபரை சந்தித்த பாஜ தலைவர் சாமிநாதனை விசாரணை வளையத்தில் கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

>