×

சட்டம்-ஒழுங்கு போலீசாரை தனிப்படைக்கு அனுப்புவதா? டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரை, மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த வக்கீல் முருக கணேஷன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: காவல் நிலையங்களில் சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணியாற்றுவோருக்கு தனிப்படை  விசாரணைப்பணி என்ற பெயரில் வேறு பணிகள் ஒதுக்கப்படுகிறது. இதனால்  ஓய்வோ, விடுப்போ எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தொடர்பணி  காரணமாக மன உளைச்சலில் பலரும் தற்கொலை செய்துள்ளனர். இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களை தடுத்திடும் வகையில், சட்டம் - ஒழுங்கு பணியிலுள்ள காவல்துறையினரை தனிப்படை விசாரணைக்கு  அனுப்புவதை தவிர்க்கத்  தேவையான விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் மனுவிற்கு உள்துறைச் செயலர், டிஜிபி ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.



Tags : personnel ,IGP , Sending law-and-order police to personnel? IGP orders DGP to respond More about this source text Source text required for additional translation information Send feedback Side panels
× RELATED சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 29 நக்சல்கள் சுட்டுக்கொலை..!!