×

வரும் 26ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர்  துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான  மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 26ம் தேதி செவ்வாய்க்கிழமை  பகல் 12 மணிக்கு, சென்னை, அண்ணா  அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில்  உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, கழக மக்களவை  - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும்   தவறாது  கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : MPs ,DMK ,chairmanship ,announcement ,Thuraimurugan ,MK Stalin , DMK MPs to meet on 26th under the chairmanship of MK Stalin: Thuraimurugan announcement
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...