வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை..! உடனே செயல்படுங்கள், பேரறிவாளனை விடுவியுங்கள்: கமல்ஹாசன் ட்விட்

சென்னை: எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாராமரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடி தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று.

இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கைக் கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன். பாரம்பரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித் தொழில் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: