சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உறவினர்கள் முயற்சி.: தடையில்லா சான்று வழங்க அரசு மருத்துவமனை மறுப்பு

பெங்களூரு: கொரோனா தொற்றுடன் நிமோனி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்க விக்டோரியா மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா 27-ம் தேதி விடுதலையாக இருந்த நிலையில், திடீர் காய்ச்சலால் பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் விக்டோரியா அரசு மருத்துவமனை மாற்றப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவுக்கு கடுமையான நிமோனி காய்ச்சல் மற்றும் அதிதீவிர நுரையீரல் தொற்று ஏற்பட்டது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு நேற்றை விட இன்று அதிகரித்து உள்ளதாகவும், சசிகலா தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் மணிபால் தனியார் மருத்துவமனைக்கு சசிகலாவை மாற்ற அவரது உறவினர்கள் முயற்சித்ததாக கூறப்படுகிறது. அனைத்து வசதிகளும் இருக்கும் சூழலில் வேறு மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்க முடியாது என்று கூறி விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தடையில்லா சான்று வழங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>