இந்தியா விளையாடும் 2 டெஸ்ட் போட்டி: சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை

சென்னை: இங்கிலாந்து 4 டெஸ்ட் போட்டி, 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் மற்றும் 2வது டெஸ்ட்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் பிப். 5ம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மைதானத்தில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களுக்கு அனுமதி இல்லையென்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் 50 சதவீத பார்வையாளர்களுடன் டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கும் தமிழக அரசும் அனுமதி அளித்திருந்தது.

ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் தற்போது போட்டியை ரசிகர்கள் இல்லாமல் நடத்தலாம் என்று பிசிசிஐ திட்டமிட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட அணி விபரம் : ஜோ ரூட் (கேப்டன்), ஆர்ச்சர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பேர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

Related Stories: