ரயில்களில் மீண்டும் உணவு சப்ளை: ஐஆர்சிடிசி முடிவு

திருவனந்தபுரம்: ரயில்களில் மீண்டும் பயணிகளுக்கு உணவு சப்ளை செய்ய இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது படிப்படியாக ரயில்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில்களும் சிறப்பு ரயில்களாகவே இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரயில்களில் உணவு சப்ளை செய்ய அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் முக்கிய நகரங்களில் மீண்டும் உணவு விற்பனையை தொடங்க இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் (ஐஆர்டிசி) தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக கவுரா, மால்டா, பகல்பூர், ஆகிய ரயில் நிலையங்களில் உணவு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் உணவு விற்பனை தொடங்கும் என கருதப்படுகிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் ரயில் போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>