அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்.: சிறிது நாள் ஓய்வில் இருக்க உள்ளதாக தகவல்

சென்னை: சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வலதுகாலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் ஆனார். சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தெரிவித்து இருந்தது; கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு விபத்தினால் எனது வலதுகாலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதுவரை ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அதை மீறியே சினிமா பணிகளையும், அரசியல் பணிகளையும் மேற்கொண்டேன். பிரசாரம் தொடங்கும்போதே எனது காலில் அதிக வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்துள்ளது. எனவே, காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் தன்னுடைய கட்சி மற்றும் சினிமா பணிகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>