×

அமராவதி பிரதான கால்வாயில் முறிந்து கிடக்கும் மரங்கள்-கரை உடையும் அபாயம்

உடுமலை : அமராவதி பிரதான கால்வாயில் முறிந்து கிடக்கும் மரங்களால் நீரோட்டம் தடைபட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமராவதி அணையில் இருந்து செல்லும் பிரதான வாய்க்கால் மூலம் சுமார் 25,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், உடுமலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் கால்வாயில் மழைநீர் அதிகளவில் செல்கிறது.

காற்றுடன் பெய்த மழை காரணமாக, பிரதான கால்வாய் ஓரம் இருந்த மரங்கள் முறிந்து கால்வாய்க்குள் விழுந்து கிடக்கின்றன. இதனால் நீரோட்டம் தடைபட்டு, தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அப்பகுதியில் கரை உடையும் அபாயம் உள்ளது.

மேலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும்போது, கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லமுடியாத நிலை உள்ளது. பெரிய அளவில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. எனவே, பொதுப்பணித்துறையினர் உடனடியாக இந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : trees-banks ,canal ,Amravati , Udumalai: The Amravati main canal has been blocked by fallen trees. Thus breaking the shore without being able to move water
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்